கொரோனா நிவாரண நிதிக்கு 2 கோடி வழங்குவதாக பிரபல நடிகர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் இந்த வைரசுக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நிதி வழங்கி வருகின்றனர். தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் அளிப்பதாகவும், மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pawan kalyan 2 crores for relief fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->