இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி.! அதிர்ச்சியில் விமான ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த கர்நாடக பாஜக முக்கிய நிர்வாகி தேஜஸ்வி சூர்யா அவசரகால கதவை திறந்தார். 

அப்போது, தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கால கதவை தவறுதலாக திறந்துவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்புகேட்டதாகவும் மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சின்ஹா தெரிவித்தார். இதனால், விமானம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. 

இந்த நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதன் படி, இந்த விமானம் மும்பை விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். 

விமானத்தில், அவசர கால கதவை திறப்பதற்கான பகுதி கவர் மூலம் மூடப்பட்டிருப்பினும், அந்த பயணி அந்த கவரை விலக்கி கதவை திறக்க முயற்சி செய்தார். இதை பார்த்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்குத் தகவல் அளித்தனர். மேலும், ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். 

இதைதொடர்ந்து, விமானம் பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விமானத்தின் அவசர கால கதவை திறப்பதற்கு முயற்சி செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passanger open emergency door in indigo airplane


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->