நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள்! ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வெற்றி வீர முழக்கம்!
Operation Sindoor PM Modi
இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் போது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் காட்டிய வீரத்தை நாடு முழுவதும் பாராட்டிய நிலையில், தற்போது பதற்றம் தணிந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தை பார்வையிட்டார்.
விமானப்படை வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர், “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு உரிய பதிலை அளித்துவிட்டீர்கள். பயங்கரவாதிகள் இந்தியா மீது கண்வைக்க முயன்றால், அவர்கள் அழிக்கப்படுவார்கள்” என்றார்.
“வெறும் 20 நிமிடங்களில் பாகிஸ்தானிலிருந்த 9 தீவிரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்கினோம். தீவிரவாத முகாம்களை முந்தி அழித்தோம்; இலக்கு பாகிஸ்தான் அல்ல. ஆனால், இந்தியாவுடன் மோதினால் எதையும் இழப்பார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம்” என்றார்.
“முப்படை வீரர்கள் வரலாற்று சாதனை செய்துள்ளீர்கள். உங்கள் வீரச்செயலுக்கு என் மரியாதை. பாரத் மாதா கீ ஜெய் முழக்கத்தின் சக்தியை உலகமே உணர்ந்துவிட்டது. நமது ஏவுகணைகள் சத்தமிடும் பொழுது, அந்த சத்தம் 'பாரத் மாதா கீ ஜெய்' என்றே எதிரிக்கு தோன்றும்” என உறுதியோடு பேசினார்.
அவரது உரையின் போதும், விமானப்படை வீரர்கள் உற்சாகமாக ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழக்கம் எழுப்பினர்.
இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த ஆதம்பூர் விமானப்படை தளமே, 'ஆபரேஷன் சிந்தூர்' செயல்பட்ட முக்கியத் தளங்களில் ஒன்றாகும். இதனை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் வதந்தியை கிளப்பிய நிலையில், இன்று பிரதமர் மோடி அங்கு சென்று உண்மையை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளார்.
English Summary
Operation Sindoor PM Modi