ஒடிசா ரயில் விபத்து : காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இறந்த பயணிகளின் ஆத்ம சாந்தி அடைய தீப விளக்குகள்! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் பலசோர் பகுதியில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 275 பேருக்கு மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிநடத்தலின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் கோவில் பிரகாரத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆயிரம் கணக்கான மக்கள் நலமடைந்து வீடு திரும்ப பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பாதிப்படைந்த பயணிகளுக்காக பிரார்த்தனை செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha Train Accident Lighting Lamps in kanchi kamatchi amman temple to Repose the Souls of the Dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->