கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட்ட 100 பேர் மருத்துவமனையில் அனுமதி.. 12 பேர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


திருமண விழாவில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபரா மாவட்டத்தில் மாட்டியா கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் திரளான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி விட்டு, பின்னர் அனைவரும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சாப்பாடுகளை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில், சாப்பிட்ட பின்னர் திடீரென வாந்தி, வயிற்றுவலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து சுதாரித்துக்கொண்டவர்கள் உடனடியாக அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மொத்தமாக 80 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha Marriage Function 100 Peoples Admit Hospital due to Food Poison


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->