இட ஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்த நிதிஷ்குமார் முடிவு.!!
Nitish Kumar decided to increase the reservation to 75 persentage
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதி வாரிய கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 3.54 கோடி பேர் என மொத்த மக்கள் தொகையில் 27.13 சதவீதம் உள்ளனர். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தவர்கள் சேர்த்து மொத்த மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் பீகாரில் உள்ளனர்.

இந்த நிலையில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு விவரங்களை பீகார் மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியிட்டார். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை 43 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 20% ஆகவும், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாகவும் உயர்த்த பரிந்துரை செய்துள்ளார்.

இதன் மூலம் பீகாரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மொத்த இட ஒதுக்கீடு அளவு 75 சதவீதமாக அதிகரிக்கும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பொது தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பீகாரில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தி இருப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Nitish Kumar decided to increase the reservation to 75 persentage