நிர்பயா வழக்கு விவகாரத்தில், கருணை மனு நிராகரிப்பு...!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

நிர்பயாவை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றம் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மீதமிருந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையிலையே தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் டெல்லி ஆளுநரிடத்திலும் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார். 

தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுவை குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதியானது.

குற்றவாளிகள் டெல்லி அரசிடம் அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த இரண்டு வருடமாக நிலுவையில் உள்ளதால் தற்போது இவர்களுக்கு தூக்கிடும் தேதி மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் கேள்விக்கும் டெல்லி அரசு குற்றவாளிகளின் கருணை மனு நிலுவையில் உள்ளதால் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணை மனுதாக்கல் செய்திருந்த முகேஷ் சிங்கின் கருணை மனுவினை நிராகரிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nirbaya case culprit petition cancelled by president


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->