ஆந்திரா : அரசு வழங்கிய நிலத்தை ஏற்க 95,106 பேர் மறுப்பு - அரசுக்கு புதிய நெருக்கடி..! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் "அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 25 லட்சம் பேருக்கு தலா 1½ சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டும் பணிகளையும் தொடங்கி விட்டன. 

ஆனால், இவர்களில் 95,106 பேர், அரசு வழங்கிய நிலத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அரசால் வழங்கப்பட்ட நிலங்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொலை தூரத்தில் இருப்பதாலும், கல்லறை தோட்டத்துக்கு அருகில் இருப்பதாலும் அந்த நிலத்தை மக்கள் ஏற்பதற்கு மறுத்துள்ளனர். 

இந்த செயல் மாநில அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சுமார் 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த புகாரை அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து மாநில சிறப்பு தலைமை செயலாளர் அஜய் ஜெயின் தெரிவித்ததாவது, "இவர்களுக்கு வழங்குவதற்காக மாற்று இடங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அந்த மக்களுக்கு வழங்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ninety five thousand peoples reject house land site in andira govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->