#கோர விபத்து... மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் - புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி
Newly Weds Among 4 Burnt in car hit tree and fire in madhya pradesh
மத்திய பிரதேசத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் வர்கலா பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் தீப்கானில் இருந்து தங்கள் கிராமமான வர்கலாவுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காலை 7 மணியளவில் நௌசர் கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அகிலேஷ் குஷ்வாஹா, ரக்ஷ் குஷ்வாஹா, ஷிவானி குஷ்வாஹா மற்றும் ஆதர்ஷ் சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
Newly Weds Among 4 Burnt in car hit tree and fire in madhya pradesh