மிரள வைக்கும் நீட் - ராஜஸ்தானில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை.!
neet training student sucide in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நீ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அப்படி பயிற்சி பெறும் மாணவர்களில் சிலர் அவ்வப்போது தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து நீர் பயிற்சி பெறுவதற்காக வந்த போரித் என்ற மாணவர் நேற்று மாலை அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போரித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவன் போரித்தின் விடுதி அறைக்குச் சென்று ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று சோதனை செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடப்பாண்டில் நடைபெற்ற 28 வது தற்கொலை சம்பவம் ஆகும்.
English Summary
neet training student sucide in rajasthan