கோவில் திருவிழாவிற்குச் சென்ற சிறுமிகள் - கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது.!
near uttar pradesh six peoples arrested for sexuall harassment case
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் உசேன்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அரசு மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, "இந்த இரண்டு சிறுமிகளும் நேற்று முன்தினம் மாலை கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, அழைத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், சிறுமிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
near uttar pradesh six peoples arrested for sexuall harassment case