2 வாலிபர்கள் வெட்டிக்கொலை:கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


 மறைமலைநகரில்  2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கழிவுநீர் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இந்த கொலையை விமலின் உறவினர்களே திட்டமிட்டு செய்ததாக போலீசாரிடம் கைதானவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்  காந்திநகர் 1-வது தெருவை சேர்ந்த விமல்   மற்றும் அவனது நண்பர் ஜெகன் ஆகிய இருவரும்  நேற்று முன்தினம்  சாலை ஓரமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு   மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டி படுகொலை செய்தது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக விமல், ஜெகன் ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா? என  பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் மறைமலைநகர் காந்திநகர் பகுதியை சேர்ந்த விமலின் நெருங்கிய உறவினர் நித்தீஷ், திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை, கற்பகம் , ஜார்ஜ் பெர்னாண்டஸ் , கரும்பூர் பகுதியை சேர்ந்த நேதாஜி, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கழிவுநீர் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இந்த கொலையை விமலின் உறவினர்களே திட்டமிட்டு செய்ததாக போலீசாரிடம் கைதானவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைதான 5 பேரிடம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 youths murdered 5 accused give shocking testimony


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->