ஜப்பானை நிலைகுலைய வைத்துள்ள நிலநடுக்கம்; பற்றி எரிந்த கட்டிடங்கள்; ரயில் தடம்புரள்வு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; பீதியில் உறைந்துள்ள மக்கள்..!
Buildings burnt in powerful earthquake that shook Japan
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கைஷூ தீவிற்கு உட்பட்ட குமாமோட்டாவில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது கடலில் இருந்து 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், வணிக நிறுவனம் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியதோடு, இதில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நிலநடுக்கத்தால் பயணிகள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலும் தடம்புரண்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, சாலைகளில் பாரிய வெடிப்பு ஏற்பட்ட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலா அதிர்வினால் பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் கைஷூ தீவிற்கு உட்பட்ட குமாமோட்டா பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
https://youtu.be/JNl2ff1vRsU
English Summary
Buildings burnt in powerful earthquake that shook Japan