மேகதாது அணை விவகாரம்; ''மத்திய இணை அமைச்சர் கூறியது ஏமாற்றம் அளிக்கிறது''; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!
CM Vijay writes to PM demanding withdrawal of central governments stand on Mekedatu Dam issue
தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதை, சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போதைய சட்டநிலையை கருத்தில் கொள்ளாமல், மத்திய இணை அமைச்சர் கூறியது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கர்நாடகா-ஆந்திரா இடையிலான வழக்கில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மேகதாது அணை தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை திரும்பப் பெற வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி, வெறும் நீர் ஆதாரம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என்றும், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நீதியை முழுமையாக அமல்படுத்துவதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CM Vijay writes to PM demanding withdrawal of central governments stand on Mekedatu Dam issue