''காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? சீமானை கொச்சையாக பேசிய யூடியூபர் பிஸ்மி மீது உடனடியாக வழக்குப் பதிய வேண்டும்''; நீதிபதி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்த யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''முதல்வர் குறித்து, திமுக எம்.எல்.ஏ. அவதூறாக பேசினார் என்பதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறை, சீமான் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், சீமான் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது தொடர்புடைய காவல் நிலையங்களில் இன்று உடனடியாக வழக்கு பதிவு செய்து, நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? என்றும், ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று குறிப்பிட்டதோடு, இந்த வழக்கை பொறுத்தவரை யூடியூபர்கள்,  சீமானை மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர். இதனை ஏற்க முடியாது என நீதிபதி விக்டோரியா கௌரி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Judge orders immediate filing of case against YouTuber Bismi for insulting Seeman


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->