தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கு; இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு,சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

குறித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை கைது செய்யப்பட்டனர். இவர்களில், கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீசார் முன்பு தினமும் காலை, மாலை என இருவேளை ஆஜராக வேண்டுமென்று என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people granted conditional bail in the horse trading case against TVK MLA


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->