நள்ளிரவில் ஆடையின்றி விரட்டப்பட்ட 02 குழந்தைகளின் தாய்; இன்று காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்த்தல்; யார் இந்த ஷர்மிளா தன்கர்..? - Seithipunal
Seithipunal


வரதட்சனை கொடுமை மற்றும் 02 பெண் குழந்தைகளை பெற்றதற்காக கணவர் வீட்டில் இருந்து நள்ளிரவில் விரட்டி அடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ஷர்மிளா தன்கர், காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்கொட்லாந்து நாட்டில், கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குண்டு எறிதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான F57 பிரிவில் பங்கேற்ற ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டை எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஹரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஷர்மிளா, தனது 02 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வலது காலை இழந்தவர். 10-ஆம் வகுப்பு முடித்த உடனே அவருக்கு  திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் கணவன் வீட்டில் வரதட்சனை கொடுமைக்கு ஆளானதோடு, 02 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததால், கணவர் வீட்டாரின் பல்வேறு கொடுமைகளையும் எதிர்கொண்டுள்ளார். 

கொடுமையிலும் கொடுமையாக ஒரு நாள் நள்ளிரவு முழுவதும் அவரது கணவர் சர்மிளாவை ஆடையின்றி அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். அதன் பிறகு, 02-வது திருமணம் செய்த ஷர்மிளா, தனது 34 ஆவது வயதில் விளையாட்டுத்துறையை தேர்வு செய்துள்ளார். தற்போது அவர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு, அவரை விரட்டியடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இந்த பத்தாம் மட்டுமன்றி, ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று ஷர்மிளா தன்கர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sharmila Dhankar won gold at the Commonwealth Games today


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->