காதலுக்காக பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் - 6 பேர் கைது.!
near uttar pradesh six peoples arrested for kill childrens
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சவுத். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்து வந்துள்ளார்.

இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் உறவுக்கு அந்தப் பெண்ணின் மகனும் மற்றும் மகளும் தொந்தரவாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த பெண் தனது காதலன் மற்றும் சிறுவர்கள் உதவியோடு இரு குழந்தைகளையும் கொலை செய்து, அவர்களின் உடலை அருகே இருந்த கால்வாயில் வீசி எரிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதில், அந்த பெண்ணின் அக்கம் பக்கத்தினருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது, "இந்த கொலை சம்பவம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மேலும், குழந்தைகளின் உடல்களை அவர்களின் தாய் மற்றும் அவரது காதலர் இருவரும் சேர்ந்து கால்வாயில் வீசியுள்ளனர்.
கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
near uttar pradesh six peoples arrested for kill childrens