தெலுங்கானா : அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு - கற்பை நிரூபிக்க அக்னீ பரீட்சை மேற்கொண்ட நபர்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சருபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் தன் மனைவியுடன் தன் தம்பிக்கு கள்ளதொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட  தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்தபோது, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் அதனை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டு பழுக்க வைத்துள்ளனர். 

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்ய வில்லை என்றால் நெருப்பில் உள்ள சூடான அந்த கம்பியை வெறும் கைகளால் எடுத்து அகற்ற வேண்டும் அப்படி செய்யுயும் போது அந்த நபருக்கு கையில் தீக்காயம் ஏற்படாவிட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்றது தெரிவித்தனர். 

இதையடுத்து அந்த நபர் இந்த அக்னீ பரீட்சையை செய்த பின்னும் அந்த நபரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதன் காரணமாக அந்த நபரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"தனது கணவர் பஞ்சாயத்து தலைவர்கள் சொன்னபடி அக்னி பரீட்சை செய்தார். அப்போது அவர் கையில் தீக்காயம் ஒன்றும் ஏற்படவில்லை. இருப்பினும் அவரை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.11 லட்சம் தொகையையும் பறித்துக்கொண்டனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana fire punishment to man


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->