மகாராஷ்டிரா : முகநூல் மூலம் பெண் அதிகாரியிடம் ரூ.22¾ லட்சம் பணம் மற்றும் நகை மோசடி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் ஆன்லைன் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகநூல் வழியாக ஒருவர் ஆண் நபர் அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, பெண் அதிகாரி அந்த நபரிடம் நட்பாக பேசி வந்தார். காலப்போக்கில், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி தினந்தோறும் ஆன்லைனில் பேசி வந்தனர். 

இந்நிலையில், அந்த நபர் திடீரென ஒருநாள் அவரது தாய்க்கு உடல் நிலை சரியில்லை, அதனால், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக தெரிவித்து அந்த பெண்ணிடம் இருந்து ரூ.7¼ லட்சம் கடனாக வாங்கினார். 

இதே போன்று பல காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் ரூ.15½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் வாங்கி உள்ளார். சில மாதங்கள் கழித்து அந்த பெண் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நபர் அவற்றைக் கொடுக்காமல் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாக  உணர்ந்த அந்த பெண் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து முகநூல் மூலம் பெண் அதிகாரியிடம் ரூ.22¾ லட்சம் பணம் மற்றும் நகையை மோசடி செய்தவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra money fraude to woman officer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->