மகாராஷ்டிரா : ஷ்ரத்தாவை 35 துண்டா வெட்டுனது போல உன்ன 70 துண்டா வெட்டிடுவேன் - லிவ் இன் மனைவிக்கு கொலை மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவத்திலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளனர். 

இதையடுத்து, டெல்லியில் மற்றொரு பெண் தன் மகனுடன் சேர்ந்து தன்னுடைய கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க விட்டெறிந்தார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் சலீம் மாலிக். இவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. 

அந்தப் பெண்ணை முதலில் சந்தித்த அர்ஷத் தன் பெயரை ஹர்ஷல் மாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து துலேயிலுள்ள ஒரு வனப்பகுதியைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்துக்கொண்டார்.

இதன் காரணமாக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து, அதற்காக ஒப்பந்தம் தயாரிக்க அமல்னர் என்ற கிராமத்திற்கு சென்றனர். அங்கு தான் ஹர்ஷலின் உண்மையான பெயர் அர்ஷத் என்று அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இருப்பினும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து, ஒஸ்மனாபாத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கினர்.

அதன் பின்னர், அர்ஷத் அந்தப் பெண்ணை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துவந்தார். இதுகுறித்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, "ஒஸ்மனாபாத்திலிருந்து நான்கு மாதம் கழித்து துலேவுக்கு வந்தோம். அங்கு வந்ததிலிருந்து என்னை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதோடு, என்னுடைய குழந்தையையும் இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சி செய்தார்.

ஆனால், அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்ததால், டெல்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னை 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இது கொலை மிரட்டல் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra man Intimidation to live in wife


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->