ம.பி : காங்கிரஸ் மூத்த தலைவர் கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - வாலிபர் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு நபர், திடீரென வாகனத்தை திரும்பியுள்ளார்.

இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் எதிர்பாராத விதமாக அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் படு காயமடைந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திக்விஜய் சிங் காரை விட்டு இறங்கி காயமடைந்த அந்த வாலிபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், "காயமடைந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் கார் குறைந்த வேகத்தில் சென்றதால், இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near madhya pradesh senior congrass leader car accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->