ம.பி : திருமண நிகழ்ச்சியில் ஜூஸ் குடித்த 43 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கர்கோன் மாவட்டம் புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் வந்தனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பழச்சாறு சாப்பிட்ட நாற்பத்து மூன்று பேருக்கு திடீரென வாந்தி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். அவர்களில் சிலர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near madhya pradesh forty three peoples addmitted hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->