சமூக வலைதள கணக்குகளின் முகப்பில் தேசிய கோடி - மக்களுக்கு பிரேதமர் மோடி அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதள கணக்குகளின் முகப்பில் தேசிய கோடி - மக்களுக்கு பிரேதமர் மோடி அறிவுறுத்தல்.!

இந்தியா முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 'வீடுகள் தோறும் தேசிய கொடி' என்ற இயக்கத்தின் கீழ் தேசிய கொடி ஏற்ற வேண்டும் எஎன்றது தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாமல், பிரதம மோடி 'என் மண், என் தேசம்' என்ற இயக்கத்தின் கீழ் அவரவர் பகுதியில் தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி 'செல்பி' படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில், பிரதமர் மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "வீடுகள் தோறும் தேசிய கொடி இயக்கத்தின் உணர்வோடு, நமது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டுக்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

national flag picture add social media account dp PM Modi info


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->