துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.! 
                                    
                                    
                                   mysterious gang robbery in bihar bank
 
                                 
                               
                                
                                      
                                            பீகார் மாநிலத்தில் உள்ள ஷேக்புரா மாவட்டம் பார்பிகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பார்பிகா-ஹதியா சவுக் பகுதியில் ஆக்சிஸ் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாங்கி நேற்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டு, செயல்பட்டுக்கொண்டு இருந்தது. 
நேற்றைய தினம் ஜூலை மாதத்தின் முதல் தேதி என்பதால், வங்கியில் ஏராளமானோர் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் வந்திருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்தது. 

இதைப்பார்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து அந்த கும்பல், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், வங்கியில் இருந்த இருபத்தைந்து லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 
இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வங்கி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியில் மர்ம கும்பல் பட்டப்பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       mysterious gang robbery in bihar bank