மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் கவலைகொள்ளச் செய்கின்றன - உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை.! - Seithipunal
Seithipunal


நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்கும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. 

இது குறித்து, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் தெரிவித்ததாவது, "முஸ்லீம்கள் மீதான வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. பர்வேஷ் வர்மா, முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று  பேசியுள்ளதாக குறிப்பிட்டு வாதிட்டார். 

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெறுப்பு பேச்சில் முஸ்லிம் ஈடுபட்டால்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில் சிபல், வெறுப்பு பேச்சில் முஸ்லிம் ஈடுபட்டால் அவர்களை போகட்டும் என்று விட்டுவிடுவார்களா? அப்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அதற்கு நீதிபதிகள் சார்பில், ஜனநாயக, மதச்சார்பாற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன. வெறுப்பு பேச்சுகள் கண்டிக்கத்தக்க ஒன்று ஆகும். இது 21-ம் நூற்றாண்டு அரசமைப்பு சாசனத்தின் 51 ஏ பிரிவு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? என்று வேதனை தெரிவித்தனர்.

அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:- "இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். எந்த மதத்துக்கு எதிராகவும் பேசப்படும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக புகார்களுக்கு காத்திருக்காமல், தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுசெய்ய டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும், புகார்களை பதிவு செய்ய மறுத்தால், நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையாக பார்க்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

muslim hate speech ret pettition supreme court hearing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->