மும்பை | விமான பணிப்பெண் மர்ம முறையில் படுகொலை! போலீசார் விசாரணை!
Mumbai Flight attendant murdered mysteriously
மும்பை புற நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் பயிற்சி விமான பணிப்பெண் மர்ம முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூபல் ஓக்ரே, ஏர் இந்தியா நிறுவனத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்பட்ட பிறகு மும்பைக்கு குடி பெயர்ந்தார்.
அந்தேரி பகுதியில் ரூபல் அவர் சகோதரி மற்றும் ஆண் நண்பர் ஒருவருடன் வசித்து வந்த நிலையில் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று ரூபலின் குடும்பத்தினர் பலமுறை தொலைபேசி மூலம் இவரை தொடர்பு கொண்டு எடுக்காத நிலையில் அவருடைய நண்பர்களின் உதவியோடு ரூபல் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.
அப்போது உள்பக்கம் கதவு தாளிட்டபடி இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரூபல் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரூபல் கொலை தொடர்பாக அவர் தங்கி இருந்த கட்டிடத்தின் துப்புரவாளர்களாக பணியாற்றும் 40 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்குள்ள பாதுகாப்பு கேமரா காட்சிகளில் ஏதேனும் தடையும் கிடைக்குமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mumbai Flight attendant murdered mysteriously