காசி கிரிக்கெட் மைதானம் - சர்சையைக் கிளப்பும் மூன்று வ்டிவங்கள்.!
moon shaped roof in kasi cricket ground
காசி கிரிக்கெட் மைதானம் - சர்சையைக் கிளப்பும் மூன்று வ்டிவங்கள்.!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி ஆன்மிக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாகவும் உருவாக உள்ளது.
அதாவது, வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இந்த மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப்டம்பர் மாதம் 23 ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா தொடங்க உள்ளது. மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

சுமார் 31 ஏக்கர் பரப்பரளவில் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ள இந்த மைதானத்தில் டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த விளையாட்டு மைதானம் கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. இதற்கு நேர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.
English Summary
moon shaped roof in kasi cricket ground