#புல்வாமா_தாக்குதல்:: மத்திய அரசே காரணம்.. "உண்மையை மறைக்கச் சொன்ன மோடி".. வெளியானது பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடி வந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் "சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறனற்ற செயலின் காரணமாக தான் ஏற்பட்டது.

அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் விமானம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்தன் காரணத்தால் சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது.

இதனால் தான் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக செல்கிறார்கள் என தெரிந்தும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செய்யப்படவில்லை.

இந்த துயர சம்பவம் நடந்து அன்று மாலையே பிரதமர் நரேந்திர மோடியிடம் இது குறித்து கூறினேன். "இது நம்முடைய தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது" என கூறினேன். ஆனால் பிரதமர் "இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும், அமைதியாக இருக்கும்படியும்" கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடி மருந்துடன் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி" என அதிர்ச்சி தரக்கூடிய தகவலை தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi asked hide truth in central govt to behind Pulwama attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->