மோடியின் பிறந்தநாளை "வரலாற்று சிறப்புடையதாக" மாற்றும் பாஜக சகோதரர்கள்..!  - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி நான்கு நிகழ்ச்சிகளில் முக்கிய உரையாற்றுகிறார். இதுமட்டுமன்றி, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட "சீட்டா" ரக சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது கையால் பூங்காவில் விடுகிறார். 

இதற்கிடையே, பாஜக அரசும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை வரலாற்று சிறப்புடையதாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது. அதற்காக இன்று ஒரே நாளில் வழக்கத்துக்கு மாறாக அதிகபட்ச கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனையை உருவாக்குவதை பாரதிய ஜனதா கட்சி குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் தலைமைத்துவம் குறித்த கண்காட்சியை புதுடெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கி வைக்கிறார். 

இதுபோன்ற கண்காட்சிகள் பிற மாநிலங்களிலும் நடத்தப்படும். மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ஏராளமானோர் "நமோ செயலி" மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி செயலி, நமோ செயலி என்று பிரபலமாக அறியப்படுகிறது. இந்த செயலி மூலம் மக்கள் ரூ.5 முதல் ரூ.100 வரை சிறிய அளவில் நன்கொடைகளை அளிக்கலாம்.  

பிரதமரின் பிறந்தநாளை ஏழைகளின் நலனுக்காக கட்சி 'சேவா பக்கவாடா' வடிவில் அர்ப்பணிக்கும். கொண்டாட்டம் மூன்று பிரிவுகளாக இருக்கும். முதலாவதாக, சேவா, இதில் சுகாதார முகாம்கள், இரத்த தான முகாம்கள், தடுப்பூசி மையங்கள் போன்றவை இருக்கும். 

பிரதமரின் காசநோய் இல்லாத இந்திய என்ற திட்டம் குறித்து, பாஜக தரப்பு தெரிவிக்கையில், "எங்கள் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு நோயாளியை தத்தெடுத்து, அவர்களின் உடல்நிலை மற்றும் தேவை குறித்து வழக்கமான சோதனையை மேற்கொள்வார்கள். 

இந்த நிகழ்வில் மரக்கன்றுகள் நடுவதுடன் தூய்மை இயக்கத்தையும் கட்சி மேற்கொள்ளும். அரசமரம் ஆக்ஸிஜனின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், எங்கள் சாவடிகளில் 10 லட்சம் அரச மரங்களை நடுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi 72 birthday celebration


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->