வருகிற 9 தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


வருகிற 9 தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

நாட்டின் தலைநகரனான டெல்லியில் வருகிற ஒன்பது மற்றும் பத்து உள்ளிட்ட தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இதேபோல், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் செப்டம்பர் 9-ம்தேதி இரவு விருந்து வழங்கப்படுகிறது.

இந்த இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அந்தவகையில், இந்த விருந்தில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.

இதற்காக, அவர் வருகிற 9ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஏற்கெனவே, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk staling going ro delhi coming 9th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->