நாட்டிலேயே முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம்! சாதனையை படைத்தது மிசோரம் மாநிலம்!
mizoram Education Literacy
முழுமையான கல்வி அறிவைப் பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் சாதனைப் படைத்துள்ளது.
இதை மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா, மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த விழாவில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்றிருந்தார்.
மிசோரம் மாநில மக்கள் அனைவரும் குறைந்தது அடிப்படை கல்வி அறிவைக் கொண்டுள்ளதாகும், அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருப்பதும் இந்த பெருமைமிக்க தரத்தை நிலைநாட்டியுள்ளது. இது ஒரு மாநிலத்தின் கல்வி வளர்ச்சி மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது மிசோரத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33% ஆக இருந்தது. அப்போது அது நாட்டிலேயே அதிக எழுத்தறிவு கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை முதன்மையாக கொண்டு திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுத்து வந்ததில் மிசோரம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றம், நாடு முழுவதும் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் வகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
English Summary
mizoram Education Literacy