இந்தியாவின் கூட்டாட்சி உணர்வு: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!
Chief Minister MK Stalin thanks Rahul Gandhi
இந்தியாவின் பலம் என்பது அதன் பன்முகத்தன்மையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த குரல் உள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மத்திய அரசு, கவர்னர்களை தவறாக பயன்படுத்தி, அந்த குரல்களை நசுக்கவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்கு தடையை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது. இது கூட்டாட்சி மீதான தாக்குதல். இதனை எதிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் ராகுலுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமைகளையும் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் விவகாரம் தொடர்பாக 08 மாநில முத்தகாலமைச்சர் எழுதிய கடிதம் தொடர்பான பதிவை மக்களவை எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Minister MK Stalin thanks Rahul Gandhi