நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை என்று வரும் ஒன்றாக நிற்பது அவசியம், எந்த கருத்து வேறுபாடும் இல்லை: கனிமொழி எம்.பி. கருத்து..!
It is necessary to stand together when it comes to the security and sovereignty of the country there is no difference of opinion Kanimozhi MP Opinion
கடந்த மாதம் 22-ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாகவுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

அதனை தொடர்ந்து, பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் தேசிய ஜனநாயக கூட்டணியை 04 பேரும், 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த 03 பேரும் என்று ஒவ்வொரு குழுவிலும் 06 அல்லது 07 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் அளிக்க செல்லும் முன்பு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறியதாவது:-

பயங்கரவாதத்தால் நாம் 26 உயிர்களை இழந்தோம், பயங்கரவாதத்தால் இந்த நாட்டில் உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது பற்றிப் பேச விரும்புகிறோம் என்றும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், பல்வேறு கட்டுக் கதைகளை உருவாக்க முயற்சிக்கும் ஏராளமான சுயநலவாதிகள் இருப்பதால் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைப்பாடு குறித்தும், என்ன நடந்தது என்பது பற்றி இந்தியா ஏற்கனவே பேசியுள்ளதாகவும், இரண்டு நிலைப்பாடுகள் இல்லையென்றும், அத்துடன், நாங்கள் எவ்வாறு தாக்கப்பட்டோம், எவ்வாறு பதிலளித்தோம், இதற்கு எவ்வாறு தீர்வு காண விரும்புகிறோம் என்பது பற்றி அவர்கள் மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசியுள்ளனர் என்றும், நாங்கள் ஏற்கனவே கூறிய அதே விஷயத்தை விளக்க விரும்புகிறோம் என்றும் விளக்கியுள்ளார்.
இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக முக்கியமான விஷயம் என்றும், அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று தான் நினைப்பதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
English Summary
It is necessary to stand together when it comes to the security and sovereignty of the country there is no difference of opinion Kanimozhi MP Opinion