குப்பைக்குள் புதையுண்ட கனிமங்கள்...! ரூ.1,500 கோடி கனிம மீட்பு பணியில் புதிய முன்னேற்றம்...!
Minerals buried garbage New progress Rs 1500 crore mineral recovery work
கழிவுகளில் புதைந்திருக்கும் மதிப்புமிக்க கனிமங்களை மீட்டு நாட்டின் வளத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த ரூ.1,500 கோடி ஊக்கத்தொகைத் திட்டம் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதலுக்கு வந்தது. தொடர்ந்து, அக்டோபர் 2-ஆம் தேதி இந்தத் திட்டத்துக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் செயல்முறைகள் விரிவாக வெளியிடப்பட்டன.இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் –
மின்னணு கழிவுகள் (E-Waste)
பயன்படுத்தப்பட்ட லிதியம்-அயன் பேட்டரிகள்
தொழில்துறை தள்ளுபடி கழிவுகள்
இவை அனைத்தையும் மறுசுழற்சி செய்து முக்கிய கனிமங்களை பிரித்தெடுப்பது.
இதற்காக பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அரசு நிதி ஊக்கத்தொகை வழங்க இருக்கிறது.இதுகுறித்து முன்னேற்ற ஆய்வுக்கான முக்கியக் கூட்டம் நேற்று மத்திய சுரங்கத்துறை செயலாளர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. சுரங்கத்துறை அமைச்சக உயரதிகாரிகள், ஜவகர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தின் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனையில், நாடு முழுவதும் கழிவுகளில் இருந்து கனிமத்தை மீட்கும் திறனை ஆண்டுக்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.உருப்படியாக செயல்பட்டால், இந்தியாவின் கனிம இறக்குமதி சார்பு குறைந்து, மறுசுழற்சி பொருளாதாரம் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Minerals buried garbage New progress Rs 1500 crore mineral recovery work