டில்லி குண்டுவெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தி பயங்கரவாதி உமர் பேசியிருந்த வீடியோ அதிரடி நீக்கம்: மெட்டா நிறுவனம் நடவடிக்கை..!
Meta has removed a video in which terrorist Omar was speaking justifying the Delhi blast attack
கடந்த 10-ஆம் தேதி மாலை தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காரை வெடிபொருட்களுடன் ஓட்டி வந்த ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியும் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை ஜிகாத் என நியாயப்படுத்தி பயங்கரவாதி டாக்டர் உமர் நபி பேசிய பழைய வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வைரலானது. இந்நிலையில் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கார் குண்டு தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி அதனை நியாயப்படுத்தி பேசிய வீடியோவில், உமர் நபி ஆங்கிலத்தில், சதிச்செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளான். அத்துடன், பயங்கரவாதிகளையும், பயங்கரவாத செயல்களையும் புகழந்து பேசியிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
Meta has removed a video in which terrorist Omar was speaking justifying the Delhi blast attack