திருடப்போன வீட்டில் 'பஞ்ச் டயலாக்', ஆர்டிஸ்ட்-னு நிரூபிக்க முயன்று போலிசில் மாட்டிய திருடன்.!
Mathya Pradesh indoor theft Got By police
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் ஒரு பங்களாவில் திருடச் சென்ற திருடன் நடிகர் அமிதாபச்சனின் திரைப்பட வசனத்தை சுவற்றில் எழுதியதால் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் சோனு யாதவ் மற்றும் விஜய் யாதவ் என்ற இரண்டு நபர்கள் ஒரு பங்களா வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது சோனு யாதவ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

ஆனால் விஜயால் அந்த வீட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. காரணம் அவர் அந்த வீட்டின் அழகில் மயங்கியுள்ளார். அப்போது தான் ஒரு ஆர்டிஸ்ட் என்று நிரூபிக்க எண்ணிய விஜய் அங்கிருந்த ஸ்கெட்ச் பேனாக்களை எடுத்துக் கொண்டு அமிதாப்பச்சனின் அக்னிபாத் திரைப்பட பஞ்ச் டயலாகை சுவற்றில் வரைய துவங்கியுள்ளான்.
அவ்வாறு வரைய துவங்கிய போது அங்கிருந்த கண்ணாடி பொருளை கீழே தள்ளி விட உடனே சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்கள் ஓடி வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள் விஜயை கைது செய்தனர்.
English Summary
Mathya Pradesh indoor theft Got By police