பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்க பாடகி! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் மோடிக்கும், இந்திய நாட்டுக்கும் ஆதரவாக அமெரிக்க பாடகி மில்பென் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "மணிப்பூர் பெண்களுக்காக என் மனம் வருந்துகிறது. 

கடவுளின் குழந்தைகள் பெண்கள். உண்மை என்னவெனில், மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை பிரதமர் மோடி பெற்று தருவார். 

அந்த நம்பிக்கை இந்திய நாட்டிற்கு உள்ளது. மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக பிரதமர் மோடி போராடுவார். 

இந்திய கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது. 

உண்மைக்கு மாறான பொய் கதைகளை நேர்மையற்ற சில ஊடகங்கள் உரக்க சொன்னாலும், உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும். 

சுதந்திரம் ஒலிக்கட்டும், என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்க சென்றபோது, இந்திய தேசிய கீதத்தை பாடிய மில்பென், மோடியின் கால்களை தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mary Millben PM Modi Manipur violence 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->