திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நிலை பாதிப்பு.. 8 குழந்தைகள் கவலைக்கிடம்.!
Marriage function food poisend in uttarpradesh 70 peoples admitted hospital
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கன்னோஜ் நடைபெற்ற திருமண விருந்தில் சாப்பிட்ட 70 பேருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கன்னோஜ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில், அங்கு ரசகுல்லா இனிப்பு பரிமாறப்பட்டுள்ளது.
இதனை சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் 8 சிறுவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Marriage function food poisend in uttarpradesh 70 peoples admitted hospital