மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு நாளை விசாரணை.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி முன்னாள் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் ஒன்பதாம் தேதி மணீஷ் சிசோடியா மீது 2021-22 ஆம் ஆண்டில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை என தனித்தனியாக நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணீஷ் சிசேரியா தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manish Sisodia bail petition heard tomorrow


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->