டெல்லி: நட்சத்திர ஓட்டலில் 20 மாதங்கள் தங்கிய ஆசாமி... ரூ.58 லட்சம் பில் கட்டாமல் ஓட்டம்...! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் 20 மாதங்கள் தங்கி இருந்த நபர் ஒருவர் ரூபாய் 58 லட்சம் கட்டணம் செலுத்தாமல் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ரோசேட் ஹவுஸ் என்ற 5 ஸ்டார் ஓட்டல் உள்ளது. இங்கு அக்குஷ் தத்தா என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முப்பதாம் தேதி ஒரு நாள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். இதையடுத்து மறுநாள் அறையை காலி செய்யாமல் அங்கேயே தங்கிருந்துள்ளார். ஆனால் அதற்கு கட்டணம் ஏதும் செலுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வரை சுமார் 20 மாதங்களுக்கு மேல் கட்டணம் செலுத்தாமல் அக்குஷ் தத்தா, ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். இந்த சம்பவம் ஓட்டலின் கணக்கு தணிக்கையில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் ரூபாய் 58 லட்சம் வாடகை செலுத்த வேண்டி உள்ளது. மேலும் அக்குஷ் தத்தாவுக்கு, ஓட்டல் ஊழியர்கள் சிலர் உதவி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வாடகை செலுத்தாமல் சுமார் 20 மாதங்கள் தங்கி இருந்த அக்குஷ் தத்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man stays at Delhi 5 star hotel for nearly 20 months with Rs 58 lakh unpaid bill


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->