போலீஸ் வேன் மோதி முதியவர் பலி - டெல்லியில் சோகம்.!!
man died for police van accident in delhi
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ராமகிருஷ்ணா ஆஷ்ரம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று காலை 5 மணியளவில் காவல்துறை வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கங்காராம் திவாரி என்பது தெரிய வந்தது.
இந்த விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனத்தில் இருந்த 2 காவலர்களும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man died for police van accident in delhi