மனைவியின் தங்கையிடம் கைவரிசையைக் காட்டிய மாமா - போக்சோ சட்டத்தில் கைது.!!
man arrested for sexuall harassment case in mumbai
மனைவியின் தங்கையிடம் கைவரிசையைக் காட்டிய மாமா - போக்சோ சட்டத்தில் கைது.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் பகுதியில், பெற்றோரை இழந்த இரண்டு சகோதரிகள் வசித்து வந்தனர். இதில், மூத்த பெண்ணுக்கு திருமணமாகிய நிலையில், தங்கையை அக்காவே வளர்த்து வருகிறார். இந்த அக்காவின் கணவர் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வருபவர்.

எப்போதும் வழக்கம் போல், சகோதரியுடன் மார்க்கெட் செல்லும் அக்காள், சம்பவத்தன்று தங்கை தூங்கிக்கொண்டிருந்தால், அவர் மட்டும் சென்றுள்ளார். அந்த நேரத்தில், பணி முடித்து வீடு திரும்பிய அக்காவின் கணவர், மனைவி இல்லாத தருணத்தில் தூங்கும் சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.
அதன் பின்னர், சிறுமியிடம் "நடந்ததை உன் அக்காளிடம் சொன்னால் இருவரையும் சேர்த்தே கொன்றுவிடுவேன்" என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையே மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய அக்காள், தங்கையின் முகக்குறிப்பு அறிந்து அவரிடம் விசாரணை செய்துள்ளார்.

அப்போது கதறி அழுத சிறுமி, அக்காவிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கா தங்கையை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாமாவை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். அதற்குள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே களத்தில் இறங்கி, பதுங்கியிருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
man arrested for sexuall harassment case in mumbai