வேறு மத மாணவனுடன் காதல் - பெற்ற மகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர தந்தை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே ஆலுவா கருமால்லூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஹாபிஸ். இவரது 14 வயதான மகள் தன்னுடன் அதே பள்ளியில் படிக்கும் வேற்று மதத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் முகம்மது ஹாபிசுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் தன்னுடைய மகளை கண்டித்தார். 

இருப்பினும் அந்த மாணவி காதலை கைவிடவில்லை. இந்த நிலையில், ஹாபிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளின் பேக்கில் ஒரு செல்போன் இருந்ததை கண்டுபிடித்தார். இதனால், ஆத்திரமடைந்த ஹாபிஸ், மகளை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கினார். அதன் பின்னர் அவரது வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார். 

சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயக்கமடைந்ததைத் தொடர்ந்து அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன் படி, போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில், அந்த மாணவியை முகமது ஹாபிஸ் தாக்கி கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், போலீசார் முகமது ஹாபிஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill daughter in kerala


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->