"இதுதான் மோடியின் கடைசி உரை."திட்டவட்டமாக சூளுரைக்கும் மம்தா பானர்ஜி.!  - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். டெல்லி ராஜ் கோட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர் சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டைக்கு விரையும் மோடி, அங்கு தேசிய கொடியை ஏற்றிவிட்டு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் கடைசி உரை இதுதான் என்று தெரிவித்துள்ளார். 

இது பற்றி பேசியுள்ள மம்தா பானர்ஜி, "டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள இன்றைய தின சுதந்திர தின விழாவில் இடம்பெறுகின்ற பிரதமர் மோடியின் உரை, கடைசி சுதந்திர தின உரையாகும். 

அடுத்த வருடத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. நாடு முழுவதும் இருக்கின்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக அரசை வீழ்த்தும்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee said about Modis Final statement on this day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->