பவானிபூர் தேர்தல் தோல்வியை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இவர்களோடு காங்கிரஸ் வேட்பாளர், சிபிஎம் வேட்பாளர், சுயேட்சைகள் என மேலும் 10 பேர் இந்த தொகுதியில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 04-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மம்தா பானர்ஜி 58,812 வாக்குகள் பெற்ற நிலையில், சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர்.

இந்த வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாகக் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளதோடு, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கோபமாக வெளியேறினார். மேலும், தேர்தல் தோல்வியை ஏற்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருப்பினும் திரிமுனால் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றியை அடுத்து சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று அவர் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee files a petition in the Calcutta High Court challenging the Bhabanipur election result


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->