வெங்காய விவகாரம் | இன்று அவருக்கு ரூ.2 தான், ஆனால் அவர் 2 லட்சம் எல்லாம் விற்று சம்பாதித்து இருக்கிறார்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : சோலாப்பூரில் உள்ள விவசாயி ஒருவர் 10 மூடை வெங்காயத்தை விற்று, லாரி போக்குவரத்துக் கட்டணம் கழித்து ரூ.2க்கான காசோலையைப் பெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வேளாண் மண்டியின் வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், அன்றைய விளைபொருள்களின் தரம் மற்றும் குறைந்த விலை வெங்காயம் காரணமாக விவசாயிக்கு முதலில் குவின்டாலுக்கு ரூ.100 இருந்தது.

சம்மந்தப்பட்ட வர்த்தகர் நசீர் கலீஃபா இந்த விவகாரத்தில் அளித்துள்ள விளக்கத்தில், விளைபொருட்களை எடைபோட்டவுடன், அன்றைய விகிதத்தின்படி பணம் செலுத்துவதை கணினி தீர்மானிக்கிறது. 

அவர் 10 மூடை வெங்காயத்தை விற்றார். அழுகிப்போனது, போக்குவரத்துக் கட்டணங்கள் கழித்த பிறகு குறைந்த விலை அவருக்கு கிடைத்தது. அவர் பல சந்தர்ப்பங்களில் எங்களுக்கு பொருட்களை விற்று ரூ. 2,30,139 பெற்று இருக்கிறார்.

விவசாயியின் மகன் அண்ணா ராஜேந்திர சவான் தெரிவிக்கையில் : நான் 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தேன். சோலாப்பூர் மண்டிக்கு 10 மூடை வெங்காயத்தை விற்கச் சென்றேன். 

எடைபோட்டு, 2 ரூபாய்க்கான காசோலை கொடுத்தார்கள். நான் கடன் வாங்கியிருந்தேன். நான் அதை எப்படி திருப்பி செலுத்துவேன்? மண்டிக்கு வெங்காயம் கொண்டு வரவே ரூ.400 செலவானது என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharastra Onion Issue Farmers


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->