மதுரை ரயில் தீவிபத்து | வசமாக சிக்கிய உ.பி.யின் முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி சுற்றுலாத் தொடர்வண்டி ஒன்று புறப்பட்டு, நாகர்கோயிலுக்கு நேற்று முன்நாள் வந்தது.

இந்த சுற்றுலாத் தொடர்வண்டி, அங்குள்ள தலங்களை பயணிகள் பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. 

பின் அங்கிருந்து நேற்றிரவு புனலூர் & மதுரை தொடர்வண்டியுடன் சுற்றுலாத் தொடர்வண்டியின் பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று அதிகாலை மதுரைக்கு வந்துள்ளது. 

மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட அந்த பெட்டிகளில் இருந்த சிலர், டீ போடுவதற்காக கேஸ் சிலிண்டர் மூலம் அடுப்பை பற்ற வைக்கவே ரயில்பெட்டி பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தி 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பேசின் (Bhasin) டிராவல்ஸ் நிறுவனம் மீது தெற்கு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ போலீசாருக்கு தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பேட்டி தீ விபத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட  உடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 

பரமேஸ்குமார் குப்தா (55)
அங்குலி ஹரியா (36)
மனோரமா அகர்வால்  (81)
குமாரி ஹேமானி பேரியல் (22)
மிதிலேஷ் குமாரி (62) 
சாந்தி தேவி வர்மா (57)

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் செய்தி : மதுரை சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Train Fire Accident case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->