வேலையை முடித்துவிட்டு லேட்டாக வந்த கணவன்.. கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றிய மனைவி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தை சார்ந்தவர் அரவிந்த் கிவர் (வயது 38). இவரது மனைவி சிவகுமாரி (வயது 35). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அரவிந்த், தினமும் பணிக்கு சென்றுவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். 

இதனால் தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று பணியை முடித்துவிட்டு தாமதமாக அரவிந்த் வீட்டிற்கு வரவே, மனைவி சிவகுமாரி பிரச்சனை செய்துள்ளார். 

இதன்பின்னர், குடும்பத்தினர் தலையிட்டு தம்பதிகளை சமாதானம் செய்த நிலையில், அனைவரும் உறங்க சென்றுள்ளனர். ஆத்திரம் தீராத சிவகுமாரி சமயலறைக்கு சென்று எண்ணெயை சூடாக்கி கணவரின் முகத்தில் ஊற்றியுள்ளார். 

சூடான எண்ணெய் ஊற்றியதும் சூடு பொறுக்க இயலாமல் அரவிந்த் அலறவே, அவரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், கணவரின் மீது ஆத்திரத்தில் எண்ணெய் ஊற்றியதை நினைத்து கண்ணீர் வடித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Wife Through Heat Oil Husband Face Burned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal