பேருந்துடன் கிராமத்திற்குள் புகுந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி சென்ற பக்கத்து கிராமத்தினர்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலோட் கால்சியா கிராமத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று இருந்துள்ளது. இந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலவர் கிராமத்தை சார்ந்தவர்கள் தான் காரணம் என்று அலோட் கிராம மக்கள் கருதியுள்ளனர். 

மேலும், ஜலவர் கிராம மக்கள் அவ்வப்போது கிராமத்தில் புகுந்து கொள்ளையடித்து, பக்கத்து மாநிலத்திற்கு சென்று விடுவதாகவும் சந்தேகித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பலமுறை காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பலனில்லை. 

இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பொருட்டு கிராம மக்கள் களமிறங்கிய நிலையில், கடந்த வாரம் கால்சியா கிராமத்தில் இருந்து பேருந்துடன் ஜலவர் கிராமத்திற்கு சென்ற மக்கள் அங்குள்ள கஞ்சர் சமூகத்தை சார்ந்த பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பேருந்தில் மிரட்டி ஏற்றி கடத்தி வந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேருந்தை மடக்கி பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்ற நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh Village woman Kidnap by Another village Members Using Bus


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->